Header Ads

கொள்ளுப்பிட்டி விபத்து: பேருந்து சாரதி மற்றும் நடத்துனர் தொடர்பில் நடவடிக்கை!


கொள்ளுப்பிட்டியில் பேருந்தொன்றின் மீது மரம் விழுந்து விபத்துக்குள்ளான நிலையில் பேருந்தின் சாரதிக்கும், நடத்துநருக்கும் ஒருவார காலம் வேதனத்துடன் விடுமுறை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த இருவரினதும் மன அழுத்தத்தை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த இருவரையும் நேற்றைய தினம் இலங்கை போக்குவரத்து சபையின் தலைமையகத்திற்கு அழைத்து அவர்களுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டுள்ளார்.

கொழும்பு கொள்ளுப்பிட்டி - லிபர்ட்டி சுற்றுவட்டத்திற்கு அருகில் பேருந்தொன்றின் மீது மரம் விழுந்ததில் 5 பேர் பலியானதுடன் பலர் காயமடைந்திருந்தனர்.

இந்தநிலையில், கொழும்பு நகரில் உள்ள மரங்களின் உறுதித்தன்மை தொடர்பில் விசேட குழுவொன்று அடுத்த வாரம் ஆய்வினை மேற்கொள்ளவுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

விடயத்துக்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோனின் பணிப்புரைக்கு அமைய இந்த செயற்பாடு இடம்பெறவுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் ஆசிரி கருணாவர்தன தெரிவித்துள்ளார்.  



No comments

Powered by Blogger.