Header Ads

மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ: 7 பேர் பலி!


மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் கோரேகான் பகுதியில் நேற்று அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

40 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

உயிரிழந்தவர்களில் 5 பேர் பெண்கள், இருவர் ஆண் ஆவர். இவர்களில் இருவர் குழந்தைகள். காயமடைந்தவர்களில் பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என அனைத்துத் தரப்பினரும் உள்ளனர். விபத்தில் சிக்கி காயம் அடைந்தவர்கள் மும்பை ஹெச்பிடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. அதிகாலையிலேயே நடந்த இந்தச் சம்பவம் மும்பையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோரேகான் எம்.ஜி. சாலையில் உள்ள ஜெய் பவானி கட்டிடத்தில்தான் இந்த தீ விபத்து நடந்துள்ளது. 7 தளங்கள் கொண்ட இந்தக் கட்டிடத்தில் நேற்று அதிகாலை 3.05 மணியளவில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. முதற்கட்ட தகவலின் அடிப்படையில் கட்டிடத்தின தரைத் தளத்தில் இருந்த கடைகளில் ஏற்பட்ட தீ அடுத்தடுத்த தளங்களுக்குப் பரவியுள்ளது என தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் தரைத் தளத்தில் தீ பற்ற என்ன காரணம் என்பது உறுதி செய்யப்பட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 



No comments

Powered by Blogger.