இலங்கை தமிழர்களை ஏமாற்றுகிறார் சீமான்: காணொளியை வெளியிட்டார் வீரலட்சுமி
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தமிழர்களை ஏமாற்றி பணம் பறிக்கிறார் என இளைஞர் ஒருவர் பேசும் குரல்பதிவை தமிழர் முன்னேற்றப் படையின் தலைவர் வீரலட்சுமி வெளியிட்டுள்ளார்.
நடிகை விஜயலட்சுமி, சீமான் விடயத்தில் முறைப்பாடு அளித்த விவகாரத்தில், தமிழர் முன்னேற்றப் படையின் தலைவர் வீரலட்சுமி குரல் கொடுத்திருந்தார்.
இந்த நிலையில் விஜயலட்சுமியை ஆதரித்ததால் வீரலட்சுமிக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் இடையேயான மோதல் வலுப்பெற்று இதுவரையிலும் தொடர்கிறது.
சீமானுக்கு எதிராக புதிய காணொளி ஒன்றை வீரலட்சுமி வெளியிட்டு இலங்கைத் தமிழர் விடயத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
அதில், இலங்கைத் தமிழர்களுக்காக எண்ணற்ற தமிழர்கள் பாடுபட்டனர். இந்த நிலையில், இலங்கை தமிழர்களை சீமான் ஏமாற்றி பணம் பறித்துள்ளார் என்று குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் அந்த காணொளியில் இலங்கைத் தமிழில் பேசும் இளைஞர் ஒருவர், ஆர்.கே. நகர் தேர்தல் தொடங்கி பல தேர்தல் செலவுக்காக சீமானுக்கு பணம் கொடுத்துள்ளேன் என பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இந்த காணொளி தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இந்த நிலையில், மௌனித்திருந்த வீரலட்சுமி - சீமான் மோதல் மீண்டும் சூடுபிடிக்க ஆரம்பமாகியுள்ளது.
No comments