வங்கியை உடைத்து தங்க நகைகள் கொள்ளை
வென்னப்புவ - அங்கம்பிட்டிய பகுதியிலுள்ள அரச வங்கியொன்றில் தங்க நகைகள் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சுமார் 7 கோடி ரூபா பெறுமதியுடைய தங்க நகைகள் இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 28 ஆம் திகதி இந்த தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன.
இரவு வேளையில் வங்கிக்குள் நுழைந்த குழுவினரால் பாதுகாப்புப் பெட்டகம் உடைக்கப்பட்டு தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
No comments