இலங்கை கடற்பரப்பில் தென் கொரிய போர்க்கப்பல்
இலங்கை கடற்பரப்பில் மற்றுமொரு சக்திவாய்ந்த போர்க்கப்பல் நங்கூரமிட்டுள்ளது.
தென் கொரிய குடியரசுக்கு சொந்தமான கப்பலே நாட்டிற்கு வருகை தந்துள்ளது.
இந்த கப்பல் நேற்று முன்தினம் (26) காலை இலங்கையை வந்தடைந்தது. கப்பலில் 249 பணியாளர்கள் உள்ளனர்.
ஆறு வருடங்களின் பின்னர் தென் கொரிய கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments