படகு மீது திமிங்கலம் மோதியதில் ஒருவர் பலி
அவுஸ்ரேலியாவில் படகு மீது திமிங்கலம் மோதியதில் படகில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சிட்னிக்கு தென்கிழக்கே 14 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லா பெரௌஸில் உள்ள கடல் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது படகில் பயணித்த இரண்டு பேரில், ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். மற்றுமொருவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் லா பெரௌஸ் கடற்பகுதியில் அதிகளவில் திமிங்கலங்கள் இருக்கின்றன எனவும் அவை கடலுக்கு வரும் படகுகளை தாக்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளன என்றும் சிட்னியின் கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
No comments