மாணவி மீது பாலியல் சேஷ்டை: நீதிமன்றம் அதிரடி உத்தரவு
பாடசாலைக்கு சென்ற 17 வயது மாணவியை பாலியல் வன்புணர்வு செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் பேரில் கைது செய்யப்பட்ட 24 வயதுடைய சந்தேகநபரை, விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரை எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மஹர நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜனித பெரேரா உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர் காலி பிரதேசத்தில் வசிக்கும் ஒரு பிள்ளையின் தந்தை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 27ஆம் திகதி காலை கிரிபத்கொடவில் இருந்து கராபுகசந்தியா செல்லும் தனியார் பயணிகள் பேருந்தில், மாகொல பகுதியில் உள்ள பாடசாலைக்குச் செல்வதற்காக மாணவி ஏறி ஆசனத்தில் அமர்ந்துள்ளார்.
இந்நிலையில் பேருந்தில் சிறுமியின் அருகில் அமர்ந்த சந்தேகநபர் சிறுமியை பாதிப்புக்கு உள்ளாக்கும் வகையிலான தகாத செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளார்.
இதன்போது, பேருந்தின் நடத்துனர் மற்றும் பயணிகள் சந்தேகநபரை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இந்நிலையில் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது நீதிபதி விளக்கமறியல் உத்தரவை பிறப்பித்துள்ளார்.
No comments