Header Ads

கொழும்பு இரண்டாம் குறுக்கு தெருவில் உள்ள ஆடையகத்தில் தீப்பரவல்


கொழும்பு, இரண்டாம் குறுக்கு தெருவில் உள்ள எட்டு மாடிகளை கொண்ட ஆடையகத்தில் ஏற்பட்ட தீப்பரவலில் சிக்குண்ட 15 பேர் காயமடைந்துள்ளனர்.

அவர்கள் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

எட்டு மாடிகளை கொண்ட குறித்த ஆடையகத்தில் இன்று காலை தீப்பரவல் ஏற்பட்டிருந்தது. இதனையடுத்து, 8 தீயணைப்பு வாகனங்களை பயன்படுத்தி தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்தது.

காயமடைந்தவர்கள் அந்த வர்த்தக நிலையங்களின் ஊழியர்கள் என தெரிவிக்கப்படுகிறது. 

No comments

Powered by Blogger.