மக்களைத் தாக்கும் ஆபத்தான நோய்கள்: கடும் எச்சரிக்கை
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மூன்று நோய்களின் பரவும் தன்மை அதிகரித்து வருகின்றது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நோய் நிலைமை தொடர்பில் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் கோரியுள்ளது.
கண் நோய், வயிற்றுப்போக்கு மற்றும் சுவாசக் கோளாறுகளுடன் கூடிய காய்ச்சல் வேகமாகப் பரவுகின்றது என அந்தச் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்
இந்த நோய்கள் பரவுவதைக் கட்டுப்படுத்த சுய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாடளாவிய ரீதியில் குறிப்பாக அதிக மழை மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக இந்த நோய் நிலை தீவிரமாகக் கூடும் எனவும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன எச்சரித்துள்ளார்.
No comments