Header Ads

இந்தியர்களுக்கு விசா தேவையில்லை: இலங்கையின் அறிவிப்புக்கு வரவேற்பு


இந்தியாவிலிருந்து இலங்கைக்கு செல்ல விசா தேவையில்லை என்ற இலங்கை அரசின் அறிவிப்புக்கு இந்திய சுற்றுலா பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இந்தியா, சீனா, ரஷியா, மலேசியா, ஜப்பான், இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய ஏழு நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு ஐந்து மாதங்களுக்கு இலவச விசா வழங்குவதற்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கடந்த செவ்வாய்க் கிழமை இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

இந்த திட்டத்தை எதிர்வரும் மார்ச் 31 ஆம் ஆம் வரை சோதனை முயற்சியாக அமல்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை முயற்சியின் அடிப்படையில், இந்த ஏழு நாடுகளுக்கும்  நிரந்தரமாக விசா தேவையில்லை என்ற அறிவிப்பு வெளியாகவுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

இந்த இலவச விசா அறிவிப்பை, தமிழக சுற்றுலா பயணிகள் மற்றும் பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர். இலங்கை அரசு தற்பொழுது இந்தியாவுடன் நல்ல உறவுகள் வைத்து இருக்கிறது. உறவுகளை மேலும் வளர்த்துக் கொள்வதற்காகவும் இது போன்ற சலுகைகள் மூலம் இந்தியா மற்றும் இலங்கை வர்த்தக மூலமாக இரு நாடுகளும் வலுவடையும் ஆதாரமாக இருக்கும் என்பதையும் சுற்றுலா பயணிகள் தெரிவித்துள்ளனர்.

அதேபோல் இலங்கைக்கு இந்தியாவில் இருந்து அதிக அளவில் சுற்றுலா பயணிகள் தினந்தோறும் செல்கிறார்கள். இலங்கைக்கு வருவதற்கு விசா இல்லாமல் சுற்றுலாவுக்கு வருகை மூலம் இலங்கை  மேலும் வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

.இலங்கைக்கு அதிகமான சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என தெரிவிக்கப்படுகிறது. 

No comments

Powered by Blogger.