அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு: 22 பேர் பலி!
அமெரிக்காவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 22 பேர் உயிரிழந்தனர்.
மேலும் 60 பேர் காயமடைந்துள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
துப்பாக்கிதாரி தலைமறைவாகியுள்ளார் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
துப்பாக்கிதாரியை தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதன் காரணமாக பொதுமக்களை வீடுகளில் இருக்க வேண்டும் என்றும் வெளியில் செல்ல வேண்டாம் எனவும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
துப்பாக்கிச்சூடு குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது என அமெரிக்க வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
No comments