வடக்கு, கிழக்கில் ஹர்த்தால்: 7 கட்சிகள் கூட்டாக அறிவிப்பு
முல்லைத்தீவு நீதிபதி ரி. சரவணராஜாவின் பதவி விலகலுக்கு நீதி கோரி எதிர்வரும் வாரம் வடக்கு கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய வகையில் பொது முடக்க போராட்டத்தை(ஹர்த்தால்) முன்னெடுக்கவுள்ளதாக 7 தமிழ் தேசிய கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன.
7 தமிழ் தேசிய கட்சிகளுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டதாக தமிழ் தேசிய கட்சியின் தலைவர் என். சிறீகாந்தா தெரிவித்தார்.
பொது முடக்க போராட்டத்திற்கான திகதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் இது தொடர்பில் பல்வேறு தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் சிறிகாந்தா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.வி.விக்னேஸ்வரன், சித்தார்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், சுரேஷ் பிரேமச்சந்திரன், சிறீகாந்தா, வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் கஜதீபன், மற்றும் தியாகராஜா நிரோஷ், மாவை சேனாதிராஜா, கலையமுதன் ஆகியோர் இக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.
அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடிய பின் அடுத்த வாரம் ஹர்த்தால் நடவடிக்கை தொடர்பில் முடிவு எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது முடக்கத்திற்கான திகதி சில தினங்களுக்குள் அறிவிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments