மாத்தறையில் 6 மாத குழந்தை கொலை: 22 வயதான தாய்க்கு விளக்கமறியல்
மாத்தறை - ஊருபொக்க பகுதியில் 6 மாத குழந்தை கொல்லப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட தாய் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் 10 ஆம் திகதி வரை அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சுவருடன் மோதியதில் தலையில் காயமேற்பட்டது என தெரிவித்து குழந்தை கடந்த 30 ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது.
எனினும், குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.
குழந்தையின் உடலில் காயங்கள் காணப்பட்டதால், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு தாயை கைது செய்தனர்.
இந்த நிலையில், 22 வயதான குறித்த பெண் மொரவக்க நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, அந்த பெண்ணுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
No comments