சீரற்ற காலநிலை காரணமாக 48,821 பேர் பாதிப்பு!
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 12 ஆயிரத்து 120 குடும்பங்களைச் சேர்ந்த 48 ஆயிரத்து 821 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மேல் மாகாணத்தில் 9 ஆயிரத்து 489 குடும்பங்களைச் சேர்ந்த 38 ஆயிரத்து 208 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தென்மாகாணத்தில் 2ஆயிரத்து 117 குடும்பங்களைச் சேர்ந்த 8 ஆயிரத்து 605 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
No comments