ஜோர்தான் - இஸ்ரேல் எல்லையில் 2 இலங்கை பெண்கள் கடத்தல்: இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் தகவல்
ஜோர்தான் - இஸ்ரேல் எல்லைப் பகுதியில் இலங்கை பெண்கள் இருவர் கடத்தப்பட்டுள்ளனர் என இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
குறித்த இருவர் பற்றிய தகவல்கள் தேடப்பட்டு வருகின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேல் - பலஸ்தீன மோதல் காரணமாக காணாமல் போன 2 இலங்கையர்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
இதேவேளை, காசாவில் வசிக்கும் இலங்கையர்களை எகிப்தின் ஊடாக இலங்கைக்கு அழைத்துவருவது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு, எகிப்து தூதரகத்துடன் கலந்துரையாடலில் ஈடுபட்டு வருகின்றது.
No comments