இந்தியாவின் சிக்கிமில் வெள்ளம்: உயிரிழப்புகள் 14 ஆக அதிகரிப்பு!
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்குண்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், 26 பேர் வரை காயமடைந்துள்ளனர். 102 பேர் வரை காணாமல் போயுள்ளனர் என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், அனர்த்தத்திற்கு உள்ளான பகுதிகளில் இருந்து இதுவரை இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அத்துடன் 22 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என இந்திய அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
வெள்ளப்பெருக்கு காரணமாக 14 பாலங்கள் உடைந்து வீழ்ந்துள்ளன என குறிப்பிடப்பட்டுள்ளது.
மூவாயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப்பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போனவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
No comments