மனைவி வெளிநாட்டில் : இலங்கையில் தந்தையும் மகளும் விபரீத முடிவு
திருகோணமலை - கந்தளாய் பகுதியில் தபால் தொடருந்தில் பாய்ந்து தந்தையும் மகளும் உயிரிழந்துள்ளதாக செய்தி வெளியானது.
இந்த சம்பவம் திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தொடருந்திலே ஏற்பட்டுள்ளது.
வெளிநாட்டில் வசிக்கும் மனைவியின் தவறான செயற்பாட்டினை அறிந்த 38 வயது தந்தை தனது 6 வயது மகளுடன் ரயிலில் குதித்து உயிரை மாய்த்துள்ளனர்.
24 வயதான திருவேந்திரன் மற்றும் மகள் பாத்திமா ஹனா ஆகியோரே விபரீத முடிவை எடுத்து உயிரை மாய்த்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணைகளில் மனைவி தனது திருமணத்திற்குப் புறம்பான உறவில் இருப்பதாக தெரிய வந்ததையடுத்து ஏற்பட்ட கோபத்தில் தனது மகளுடன் தந்தை உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் கந்தளாய் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
No comments