சமையல் எரிவாயுவின் புதிய விலை அறிவிப்பு
இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய, 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 145 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அதன் புதிய விலை மூவாயிரத்து 127ரூபாவாகும்.
அதேநேரம், 5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு 58 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு புதிய விலை ஆயிரத்து 256 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
No comments