'டயானா பைத்தியம்': ரஞ்சித் கருத்துக்கு கடும் எதிர்ப்பு
இராஜாங்க அமைச்சர் டயானா கமகேயை, தமது கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார அவதூறாக பேசியதற்கு சில ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மத்தும பண்டார, நாடாளுமன்றத்தில் இராஜாங்க அமைச்சரை பைத்தியம் என்று அழைத்தார்.
இந்த நிலையில், இதுபோன்ற மொழியை பயன்படுத்தப்படுவது மிகவும் ஏமாற்றமளிக்கிறது. எந்த விதமான பாலின வெறுப்புப் பேச்சுக்களையும் கட்சிக்குள் சகித்துக் கொள்ளக் கூடாது என்பதில் தாம் இன்னும் உறுதியாக இருப்பதாக கட்சி உறுப்பினர் சமத்க ரத்நாயக்க தெரிவித்தார்.
ரஞ்சித் மத்தும பண்டாரவின் கருத்துக்கு கட்சியின் இளைஞர் துணைத் தலைவர் ரெஹான் ஜயவிக்ரமவும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
தம்மை போன்ற இளைய உறுப்பினர்களுக்கு கட்சிக்குள் கருத்துக்களை தெரிவிக்க சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments