விடுதலை புலிகள் பௌத்த மதத்திற்கு எதிரானவர்கள் அல்லர்: சார்ள்ஸ் நிர்மலநாதன்
தமிழ் மக்களோ, தமிழ் மக்களின் விடுதலை அமைப்போ பௌத்த மதத்திற்கு எதிரானவர்கள் அல்ல என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும்போதே சார்ள்ஸ் நிர்மலநாதன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
தனிச்சிங்களம் கொண்டுவரப்பட்டதன் பிற்பாடு பொலன்னறுவை, காலி போன்ற இடங்களில் இந்து குருமார் தாக்கப்பட்டனர். அதன் பின் தமிழர்களின் பல்லைக்கழக அனுமதியைத் தடுப்பதற்காக புதிதாக சட்டங்கள் தடுக்கப்பட்டது. இதன் விளைவாகத் தான் தமிழர்கள் ஆயுதமேந்திப் போராடினார்கள்.
குருந்தூர் மலை தொடர்பாக ஜனாதிபதி , நீதியமைச்சர் மற்றும் பணிப்பாளர் நாயகம் ஆகியோருடன் பல தடவைகள் கலந்துரையாடியும் இன்று வரை தீர்வுகள் கிடைக்கவில்லை. எனவே, சான்றுகள் அடிப்படையில் சர்வதேச ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும்.
ஏனெனின் எமது இன மற்றும் மத சான்றுகள் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இவற்றை விட 2018ம் ஆண்டு காலப்பகுதியில் நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் தொல்லியற் திணைக்களத்தால் நிலங்கள் பறிபோகும் நிலையிலிருந்தபோது அமைச்சராக இருந்தவர் தற்போது எதிர்க்கட்சித் தலைவராக உள்ளார்.
எனவே குருந்தூர்மலை தொடர்பான விடயங்களை தமிழ் மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்பதுடன், இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டும் என்பதையும் வலியுறுத்த வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments