பேருந்துக்குள் சூடு: பெண் படுகாயம்!
அம்பலாந்தோட்டை - கொக்கல்ல பகுதியில் பேருந்துக்குள் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.
நேற்று மாலை இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அந்த பெண் பயணித்த பேருந்தை வழிமறித்த இருவர், துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளனர் என
பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ குறிப்பிட்டுள்ளார்.
துப்பாக்கிச்சூட்டில் 47 வயதான பெண் காயமடைந்துள்ளார்.
காயமடைந்த பெண் அம்பலாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொக்கல்ல பகுதியில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரின் தாயே இவ்வாறு காயமடைந்துள்ளார்.
No comments