பொலிஸாருக்கு பயந்து தப்பி ஓடிய நபர் எடுத்த விபரீத முடிவு
கம்பளை பிரதேசத்தில் பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்ய சென்ற ரயில்வே திணைக்கள ஊழியர் ஒருவர் ரயிலில் பாய்ந்து உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
46 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
ரயில்வே திணைக்களத்திற்கு சொந்தமான இரும்பு சிலம்பொன்றை முச்சக்கர வண்டியில் ஏற்றிச் சென்ற சாரதியை கம்பளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
முச்சக்கரவண்டியில் பயணித்த சந்தேக நபர் அதிலிருந்து தப்பி ஓடியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
No comments