இந்து கோயிலில் வழிபாடில் ஈடுபட்டார் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்
பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் இந்து கோயில்களுக்கு சென்று நேற்று வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.
இந்தியாவில் ஜி -20 உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்த நிலையில், நேற்றைய தினம் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் தனது மனைவியான அக்ஷதா மூர்த்தியுடன் புதுடில்லியில் அமைந்துள்ள அக்ஷர்தாம் கோயிலுக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.
பிரித்தானிய பிரதமராக பதவியேற்றதன் பின்னர் ரிஷி சுனக் இந்தியாவிற்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.
பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments