Header Ads

பிரேசிலில் விமான விபத்து: 4 பேர் பலி!


பிரேசிலின் அமேசான் மாநிலத்தில் இடம்பெற்ற விமான விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமேசான் மாநில தலைநகரான மனாஸிலிருந்து 400 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள பார்சிலோஸ் மாகாணத்தில்  இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் விமானத்தில் பயணித்த  12 பயணிகளும், விமானி ஒருவரும், துணை விமானி ஒருவரும் உயிரிழந்துள்ளனர் என அமேசான் மாநிலத்தின் ஆளுநர் வில்சன் லிமா குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில்  மனாஸ் ஏரோடெக்ஸி ஏர்லைன்ஸ் இந்த விபத்து இடம்பெற்றதை உறுதிப்படுத்தி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர்களில் அமெரிக்க பிரஜைகளும் உள்ளடங்குகின்றனர் என பிரேசிலிய ஊடகங்கள்  குறிப்பிடுகின்றன.

இதேவேளை விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான விசாரணைகள் இடம்பெறுகின்றன என்று பிரேசில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 



No comments

Powered by Blogger.