30 இடங்களில் புலானாய்வு பிரிவு சோதனை!
தமிழகத்தின் சென்னை, கோவை, தென்காசி மாவட்டங்களில் 30 இடங்களில் என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலானாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ள்ளனர்.
கோவை உக்கடத்தில் இடம்பெற்ற கார் குண்டு வெடிப்பு தொடர்பாக இந்த சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கோவையில் கடந்த ஆண்டு ஒக்டோபர் 23 ஆம் திகதி உக்கடத்தில் உள்ள கோட்டை சங்கமேஸ்வரர் கோயிலின் முன் கார் குண்டு வெடிப்பு இடம்பெற்றது. இதில் ஜமேசா முபின் என்பவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து முபினின் உறவினர்கள், நண்பர்கள், அவருடன் தொடர்புடையவர்கள் என 11 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
இந் த நிலையில், நேற்று கோவைக்கு ஹைதராபாத்தில் இருந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் சென்றுள்ளனர். அவர்கள் 22 குழுக்களாகப் பிரிந்து 22 இடங்களில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஒரு குழுவில் 4 முதல் 5 அதிகாரிகள் பணியாற்றியுள்ளனர்.
நகர எல்லைக்குள் உக்கடம், கவுண்டம்பாளையம், ஆர்எஸ்புரம், கிணத்துக்கடவு உள்பட 21 இடங்களிலும் குனியமுத்தூரில் ஓரிடத்திலும் சோதனை நடைபெற்றுள்ளது. சோதனை நடைபெறும் பகுதிகளில் உள்ளூர் பொலிஸாரும் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
சோதனை நடைபெறும் பகுதியில் இருந்து யாரும் வெளிவரவும் உள்ளே செல்லவும் அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.
கடந்த ஓக்டோபரில் அரபிக் கல்லூரியில் இடம்பெற்ற சோதனையின்போது ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அதன் அடிப்படையிலேயே தற்போது அங்கு மீண்டும் சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது .
இதுதவிர சென்னையில் ஈஞ்சம்பாக்கம், திருவிகநகர் உள்ளிட்ட இடங்களிலும், தென்காசி மாவட்டம் கடையநல்லூரிலும் சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.
No comments