மாணவியை முட்டிய மாடு!
சென்னை - அருகம்பாக்கம் பகுதி இளங்கோ வீதியில் நடந்து சென்ற பாடசாலை மாணவியை மாடு கொடூரமாக தாக்கும் காட்சி சமூக வளைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றது.
அந்த காணாளியில், சிறுமி அவரது தாயாருடன் பாடசாலை சென்று கொண்டிருக்கும் போது குறித்த மாடு தாக்கியுள்ளது.
தாயின் கண் முன்னால் மாடு சிறுமியை முட்டிய போது அந்த மாட்டை கட்டுப்படுத்த பலரும் முயற்சித்தும் முடியவில்லை. தொடர்ச்சியாக குறித்த சிறுமியை காயப்படுத்தி கொண்டே இருந்தது.
இதன்போது பெரும் முயற்சியில் பலர் கல் மற்றும் மரக் கட்டைகளை பயன்படுத்தி அந்த சிறுமியை படுகாயங்களுடன் மீட்டு எடுத்துள்ளனர்.
சம்பவத்தில் படுகாயமடைந்த சிறுமி தற்போது அருகம்பாக்கம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார் என தெரியவந்துள்ளது.
No comments