யாழில் இளம் கர்ப்பிணி தாய் ஒருவர் உயிரிழப்பு!
கர்ப்பப்பை குழாயில் கரு தங்கியதில் கர்ப்பப்பை குழாய் வெடித்து பெண்ணொருவர் உயிரிழந்துள்ள சம்பவம் யாழ்ப்பாணத்தில் நேற்று (16) இடம்பெற்றுள்ளது.
வடமராட்சி காந்தியூர் புலோலி தெற்கு, புலோலியைச் சேர்ந்த துளசி அனுசன் (வயது- 30) என்ற இளம் கர்ப்பிணி தாயான ஆசிரியையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த ஆசிரியை மன்னார் சென். சேவியர் பெண்கள் கல்லூரியில் கல்வி கற்பித்து வரும் நிலையில் நேற்று புதன்கிழமை(16) காலை பாடசாலைக்கு செல்வதற்கு ஆயத்தமான போது வயிற்றுக்குற்று ஏற்பட்டதைய தொடர்ந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோதும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்களால் தெரிவிக்கப்பட்டது.
குறித்த உயிரிழப்பு தொடர்பில் பருத்தித்துறை மரண விசாரணை அதிகாரி சதானந்தம் சிவராசா விசாரணைகளை மேற்கொண்டு பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.
கர்ப்பப்பை குழாயில் கரு தங்கி குழாய் வெடித்ததன் காரணமாக இரத்தப் பெருக்கு ஏற்பட்டு குறித்த மரணம் சம்பவித்ததாக பிரேத பரிசோதனையை மேற்கொண்ட சட்ட வைத்திய அதிகாரி வாசுதேவா அறிக்கையிட்டுள்ளார்.
No comments