Header Ads

சென்னை சில்க்ஸ் ஆடை விற்பனை நிலையத்தில் தீ!


கும்பகோணம் திருநாராயணபுரம் வீதியில் இயங்கி வரும் சென்னை சில்க்ஸ் ஆடை விற்பனை நிலையத்தில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

குறித்த ஆடை விற்பனை நிலையத்தில் 500 இற்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

ஞாயிற்றுக்கிழமை மற்றும் ஆடி சிறப்பு தள்ளுபடி அறிவித்திருந்ததால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஆடைகளை வாங்குவதற்காக அங்கு குவிந்திருந்தனர். 

இந்த நிலையில் மாலை 7 மணி அளவில் அந்த நிறுவனத்தின் முகப்பு பகுதியிலிருந்து புகை எழும்பியது. இதனையறிந்த வீதியில் நின்றவர்கள், நிறுவன ஊழியரிடம் தெரிவித்ததையொட்டி, கடை ஊழியர்கள் மற்றும் உள்ளே இருந்த பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியேறி வீதிகளில் கூடினர்.

மேலும், எதிர்புறம் உள்ள அரசு போக்குவரத்து கழகம், தனியார் மருத்துவமனையிலிருந்த நோயாளிகள், வணிக வளாகங்கள் மற்றும் குடியிருப்புகளில் இருந்தவர்களும் வெளியேறியுள்ளனர். இதில் சிலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

இது தொடர்பாக தகவலறிந்த கும்பகோணம் கிழக்கு பொலிஸாரும் தீயணைப்பு துறையினரும் அந்த இடத்திற்கு விரைந்தனர்.

அத்துடன், தீயணைப்பு துறை வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். சுமார் 50 அடி உயரத்திற்கு மேல். தீ பரவியதால் சுமார் 3 கிலோமீட்டர் தூரத்திற்கு புகை மூட்டமாக காட்சியளித்தது. இதனால் அந்தப் பகுதியில் மின்சாரம் முழுவதும் நிறுத்தப்பட்டது.

இது தொடர்பாக பொலிஸார் முதற்கட்ட விசாரணையில் எளிதில் தீப்பிடிக்க கூடிய பொருட்கள் மற்றும் மின் சாதனங்களால் தீ பரவி இருக்கலாம் என கூறப்படுகிறது.




No comments

Powered by Blogger.