Header Ads

கோதுமை மா இறக்குமதிக்கான அனுமதிப்பத்திர முறைமை நீக்கம்!

 


கோதுமை மா இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த அனுமதிப் பத்திர முறைமை இரத்து செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், ஒரு கிலோகிராம் கோதுமை மா இறக்குமதிக்காக விதிக்கப்பட்டிருந்த இறக்குமதி வரி 11 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், கோதுமை இறக்குமதி செய்யும்போது, 6 ரூபா வரியை விதிக்க நிதியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

எவ்வாறாயினும், இந்த விடயம் காரணமாக கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்படமாட்டாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் இறக்குமதி கட்டுப்பாட்டை ஏற்படுத்தவே எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கோதுமை மா இறக்குமதி அனுமதி பத்திர முறையை இரத்து செய்து, முன்னதாக அமுலில் இருந்த முறைமை மீண்டும் அமுல்படுத்த வேண்டும் என புறக்கோட்டை மொத்த விற்பனையாளர்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

அத்துடன், கோதுமை மாவை இறக்குமதி செய்யும் இரண்டு பெரிய நிறுவனங்களுக்கு கோதுமை கருவை இறக்குமதி செய்ய வாய்ப்பளித்து பெரும் லாபம் ஈட்டுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.



No comments

Powered by Blogger.