உக்ரைன் ஜனாதிபதியை கொலை செய்ய முயற்சி!
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை கொலை செய்ய ரஷ்யா மேற்கொண்ட முயற்சியை முறியடித்துள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு சேவை தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல் முன்கூட்டியே அறியப்பட்டமையினால் ஜெலென்ஸ்கியை பாதுகாப்பாக வைத்திருக்க முடிந்ததாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், ஜெலென்ஸ்கியின் இருப்பிடத்தை ரஷ்யாவிற்கு வழங்க முயன்ற கூட்டாளியை கைது செய்துள்ளதாகவும் உக்ரைனின் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதலில் உளவாளியாக செயற்பட்ட பெண் ஜெலென்ஸ்கியின் வருகையின் நேரத்தையும் வழியையும் கண்டுபிடிக்க பல முயற்சிகளை முன்கூட்டியே அவருக்கு கடும் பாதுகாப்பு வழங்கப்பட்டதாகவும் கூறப்பட்டிருந்தது.
இந்த பெண்ணைக் கண்காணிப்பதன் மூலம், உக்ரைனில் மின்னணு போர் முறைகள் மற்றும் வெடிமருந்துக் கிடங்குகள் எங்கு உள்ளன என்பதைக் கண்டறிய ரஷ்யா முயற்சித்து வருவதாக பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த தகவல் அடங்கிய குறுஞ்செய்திகளின் திரைக்காட்சிகளை பாதுகாப்புப் படையினர் வெளியிட்டுள்ளனர்.
No comments