Header Ads

அ.தி.மு.கவை அழிக்க நினைக்காமல் தி.மு.கவை காப்பாற்றிக் கொள்ளுங்கள்: இ.பி.எஸ். எச்சரிக்கை


அ.தி.மு.கவை அழிக்க வேண்டும் என்று ஒருபோதும் நினைக்க வேண்டாம் எனவும்  உங்கள் கட்சியை காப்பாற்றிக் கொள்ளுங்கள் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மதுரையில் நடந்த அ.தி.மு.க. மாநாட்டில் அந்த கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளராக பழனிசாமி பொறுப்பேற்ற பின்னர்  அந்த கட்சியின் முதல் மாநில மாநாடு மதுரை அருகே வலையங்குளத்தில் நேற்று இடம்பெற்றது. மக்களவைத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு மதுரையில் நடக்கும் இந்த மாநாட்டுக்கு ’அ.தி.மு.க. வீர வரலாற்று பொன்விழா எழுச்சி மாநாடு’ எனப் பெயரிட்டு இருந்தனர். 

தமிழகம் முழுவதும் இருந்து இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.   இன்று காலை திட்டமிட்டப்படி மாநாட்டு நுழைவு வாயிலில் 51 அடி கொடி கம்பத்தில் பொதுச்செயலாளர் பழனிசாமி அ.தி.மு.க. கொடியேற்றி வைத்து மாநாட்டை தொடங்கி வைத்தார். 

பொதுச் செயலாளர் பழனிசாமி மாநாட்டில் உரையாற்றுகையில்,

இன்று அதிமுக 51ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. 31 ஆண்டு காலம் தமிழகத்தை அ.தி.மு.க. ஆட்சி செய்துள்ள பெரிய கட்சியாக திகழ்கிறது. அ.தி.மு.க. ஆட்சியால்தான் தமிழகம் ஏற்றும் பெற்றுள்ளது. 

தி.மு.க. அரசின் 2 ஆண்டு காலத்தில் தமிழகம் பின்னடைவைதான் பார்க்கிறோம். 50 ஆண்டு காலம் தீர்க்க முடியாத காவிரி நதி நீர் பிரச்சனையில் ஜெயலலிதா தொடர்ந்து சட்டப்போராட்டம் நடத்தி உச்சநீதிமன்றம் மூலம் தீர்ப்பை பெற்றார். 

இந்தியாவிலே உயர் கல்வி படிக்கிற மாணவர்கள் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடம் பெற்றது. அ.தி.க. தேசிய விருது பெற்ற மாநிலமாக தமிகத்தில் சிறந்த ஆட்சியை கொடுத்தோம். கடந்த 18 ஆம் திகதி முதல்வர் ஸ்டாலின் இராமேஸ்வரத்துக்கு சென்று கச்சதீவை மீட்போம் என்று பச்சை பொய் பேசினார். கச்சதீவு தி.மு.க. ஆட்சியில்தான் தாரை வார்த்துக் கொடுக்கப்பட்டது. தட்டிக் கேட்கவில்லை. போராட்டம் நடத்தவில்லை. இன்று முதல்வர் முக.ஸ்டாலின் வீர வசனம் பேசுகிறார். கச்சதீவு பறிப்போனதால் இராமேஸ்வரம் மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லும்போது ஓய்வெடுக்கவும், வலைகளை காய வைப்பதற்கும் கச்சதீவை பயன்படுத்தினார். கச்சதீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என ஜெயலலிதா பலமுறை வலியுறுத்தினார். உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து கச்சதீவை மீட்க போராடினார். உச்சநீதிமன்றம் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால், அப்போது ஆட்சியில் இருந்த கருணாநிதி பதில் மனு தாக்கல் செய்யவில்லை. மத்திய அரசு, கச்சதீவை மீட்க முடியாது, ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியாது என பதில் மனு தாக்கல் செய்தது. அதே பதில் மனுவை கருணாநிதி உச்சநீதிமன்றத்தில் போட்டார்.

மீண்டும் ஜெயலலிதா அ.தி.மு.க. ஆட்சியை கொண்டு வந்தபிறகு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்துள்ளார். கச்சதீவை மீட்க போராடுகிற கட்சியாக அ.தி.மு.க. உள்ளது. 13 ஆண்டு காலம் மத்திய அமைச்சரவையில் தி.மு.க. அமைச்சர்கள் இருந்தனர். அப்போது கச்சதீவை மீட்க முயற்சி எடுக்கவில்லை. இப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரது ஆட்சிக்கு ஆபத்து வந்துவிட்டது என்று பதறிப்போய் அச்சத்தின் அடிப்படையில்தான் மீனவர்கள் மத்தியில் கவர்ச்சிகரமாக பேசி கச்சதீவை மீட்போம் என பொய் பேசுகிறார். 

அ.தி.மு.கவை அழிக்க வேண்டும் என்று ஒருபோதும் நினைக்க வேண்டாம். உங்கள் கட்சியை காப்பாற்றிக் கொள்ளுங்கள். அ.தி.மு.க. நிர்வாகிகள் மீது பொய் வழக்கு பொடுகிறீர்கள். அனைத்தும் சட்டரீதியாக சென்று சட்டரீதியாக வெல்வோம். நான் ஒரு சாதாரண தொண்டன். ஒரு தொண்டன் கூட சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்  ஆகலாம். ஏன் முதலமைச்சராகலாம். ஒரு கிளைச்செயலாளராக இருந்து, ஒன்றிய பொறுப்புக்கு, மாவட்ட பொறுப்புக்கு வந்து மாநில பொறுப்புக்கு வந்து நிர்வாகிகள், தொண்டர்கள் ஆதரவுடன் தற்போது பொதுச்செயலாளராக வந்துள்ளேன். வேறு எந்த கட்சியிலாவது முடியுமா?

அ.தி.மு.கவில் மட்டுமே உழைக்கிற சாதாரண தொண்டன் கூட உச்சப்பட்ச பதவிக்கு வர முடியும். இதுவரை எந்த மாநாட்டிற்கு இதுபோல் 15 லட்சம் தொண்டர்கள், மக்கள் வந்தில்லை. அந்த சரித்திர சாதனையை நிர்வாகிகள், தொண்டர்கள் ஏற்படுத்தி தந்துள்ளீர்கள் என்று தெரிவித்துள்ளார்.



No comments

Powered by Blogger.