வெங்காயத்துக்கு 40 சதவீதம் வரை ஏற்றுமதி வரியை விதிக்க தீர்மானம்!
இந்தியாவில் அண்மைக்காலமாக வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ள நிலையில், தற்பொழுது வெங்காயத்துக்கு 40 சதவீதம் ஏற்றுமதி வரியை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
முக்கிய சந்தைகளில் வெங்காயத்தின் சராசரி மொத்த விற்பனை விலை ஜூலை முதல் ஒகஸ்ட் வரையான காலப்பகுதியில் சுமார் 20 சதவீதம் வரை உயர்ந்துள்ளதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி உடன் அமுலாகும் வகையில் எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதி வரை இந்த வரியை விதிக்க இந்தியா தீர்மானித்துள்ளது.
இந்த தீர்மானம் இந்தியாவிடமிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்யும் இலங்கை, பங்களாதேஷ், நேபாளம், மலேசியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் போன்ற நாடுகளை பாதிக்கும் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
No comments