ஐரோப்பிய எல்லையில் இலங்கையர்கள் கைது!
ஐரோப்பிய எல்லையில் வைத்து இலங்கையர்கள் உள்ளிட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
பெலாரஸில் இருந்து போலந்துக்கு சட்டவிரோதமாக குடியேறிய 160 பேரில் இலங்கையர்களும் உள்ளடங்குகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.
சோமாலியா, எகிப்து, எத்தியோப்பியா மற்றும் இலங்கை குடிமக்கள் உட்பட 160 பேர் போலந்திற்குள் செல்ல முயன்றுள்ளனர் என எல்லை அதிகாரிகளைமேற்கோள்காட்டி போலந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த குழுவிற்கு உதவ முயன்ற மூன்று உக்ரைனிய பிரஜைகளும் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
No comments