Header Ads

ஏவுகணை உற்பத்தியை அதிகரிக்குமாறு வடகொரிய ஜனாதிபதி அதிரடி உத்தரவு!

இராணுவ சக்தியை பலப்படுத்தவும் போருக்குத் தயாராக இருப்பதற்கும் ஏவுகணை உற்பத்தியை அதிகரிக்குமாறு வட கொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன் உத்தரவிட்டுள்ளார்.

தென் கொரியாவும் அமெரிக்காவும் வருடாந்த இராணுவப் பயிற்சிகளுக்குத் தயாராகி வரும் நிலையில், வட கொரிய அரச ஊடகமொன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் தந்திரோபாய ஏவுகணைகள், ஏவுகணை ஏவுதளங்கள், கவச வாகனங்கள் மற்றும் பீரங்கி குண்டுகளை உற்பத்தி செய்யும் முக்கிய ஆயுத தொழிற்சாலைகளை பார்வையிட்ட கொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

தென் கொரியா மற்றும் அமெரிக்காவின் இந்த இராணுவப் பயிற்சியை வடகொரியா ஒரு யுத்தத்திற்கான ஒத்திகையாக பார்க்கும் நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான பின்னணியில் விரிவாக்கப்பட்ட மற்றும் பலப்படுத்தப்பட்ட முன்னணி இராணுவப் பிரிவுகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய, ஏவுகணை உற்பத்தியை வினைத்திறனான முறையில், அதிகரிப்பது முக்கிய இலக்காகும் என கிம் ஜொங் உன் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பாரியளவிலான பல ஏவுகணைகள் உள்ளிட்ட அவசரத் தேவை இருப்பதாகவும் அவர் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, யுக்ரைனுடனான போருக்கு வடகொரியா ஆயுதங்களை ரஷ்யாவுக்கு வழங்கவுள்ளதாக அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது.

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு கடந்த மாதம் பியோங்யாங்கிற்கு விஜயம் செய்த போது வட கொரிய அதிகாரிகளுடன் உக்ரைனில் அதன் போருக்காக மொஸ்கோவுக்கு வெடி மருந்துகளை விற்பனை செய்வதை அதிகரிப்பது குறித்து கலந்துரையாடியதாக அமெரிக்க உளவுத் துறை அதிகாரிகள் அறிவித்ததாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. 


No comments

Powered by Blogger.