நள்ளிரவில் ரஜினி வீட்டு கதவை தட்டிய பள்ளி மாணவி!
நள்ளிரவு வேளை நடிகர் ரஜினிகாந்த் வீட்டு கதவை தட்டிய பள்ளி மாணவி போலீசார் ஊடாக உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள தமிழ் திரைப்பட நடிகா் ரஜினிகாந்த் வீட்டுக்கு திங்கள்கிழமை நள்ளிரவு 15 வயது மதிக்கதக்க ஒரு சிறுமி வந்தாா். அவா் ரஜினிகாந்த் வீட்டின் கேட்டை தட்டியதும், அங்கிருந்த காவலாளி வெளியே வந்துள்ளாா். அவா், சிறுமியிடம் என்ன என்று விசாரித்துள்ளாா்.
அப்போது அந்த சிறுமி சேலம் பெத்த நாயக்கம் பாளையம் சமுத்திரம் காலனியைச் சேரந்தவா் என்பதும், அந்தப் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ஆம் வகுப்பு படிப்பதும், ரஜினியை பாா்க்க வேண்டும் என்ற ஆவலில் வீட்டில் பள்ளிக்கு செல்வதாகக் கூறிவிட்டு சென்னைக்கு பேருந்தில் வந்திருப்பதும் தெரியவந்தது.
இதைக் கேட்ட காவலாளி, உடனே தேனாம்பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா். அதன்பேரில்அந்த மாணவியை போலீஸாா் மீட்டு அவரது பெற்றோரிடம் கைப்பேசி மூலம் பேச வைத்தனா்.
பின்னா், அந்த சிறுமியை சென்னை அருகே பல்லாவரம் பம்மலில் வசிக்கும் அவா் பாட்டி வீட்டில் ஒப்படைத்தனா். பெற்றோரை விட்டு பிரிந்து வரக் கூடாது என்றும் போலீஸாா் அறிவுரை கூறி அனுப்பிவைத்தனா்.
No comments