ரணில் இன்று நாடாளுமன்றில் விசேட உரை
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (09) நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார்.
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் ஏனைய பல விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதியின் உரையில் கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அண்மையில் நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டில் முன்வைக்கப்பட்ட யோசனைகள் தொடர்பில் உரையாற்றும் அதேவேளை, அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை ஜனாதிபதி வெளிப்படுத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
No comments