ஒரு மாதத்திற்கும் குறைந்த காலப்பகுதிக்கான நெல் கையிருப்பே உள்ளது
ஒரு மாதத்திற்கும் குறைவான காலப்பகுதிக்கான நெல் கையிருப்பு மாத்திரமே தம்வசம் உள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது.
நெல் சந்தைப்படுத்தல் சபையிடம் தற்போது 45 இலட்சம் கிலோகிராம் நெல் மாத்திரமே கையிருப்பில் உள்ளதாக சபையின் தலைவர் புத்திக்க இத்தமல்கொட தெரிவித்துள்ளார்.
நெல் கிடைக்காத காரணத்தினால் மூடப்பட்டுள்ள ஹம்பாந்தோட்டை நெல் களஞ்சியசாலை, விவசாய அமைப்புகளால் கோரிக்கை முன்வைக்கப்பட்டால் திறப்பது தொடர்பில் ஆராயப்படும் என அவர் மேலும் கூறியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அமைச்சர் மஹிந்த அமரவீர ஹம்பாந்தோட்டை மாவட்ட செயலகத்தில் நாளை(18) கலந்துரையாடலொன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் புத்திக்க இத்தமல்கொட தெரிவித்துள்ளார்.
No comments