9 அத்தியாவசிய பொருள் விலை குறைப்பு
இன்று முதல் அமுலாகும் வகையில் லங்கா சதொச நிறுவனம் 9 பொருட்களுக்கான விலையை குறைத்துள்ளது.
இதன்படி, 400 கிராம் நிறைகொண்ட எல்.எஸ்.எல் உள்ளுர் பால்மா பொதியொன்றின் விலை 29 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, 400 கிராம் நிறையுடைய குறித்த பால்மா 970 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
ஒரு கிலோகிராம் சோயா மீட்டின் விலை 25 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
அதன் புதிய விலை 625 ரூபாவாகும்.
ஒரு கிலோகிராம் சிவப்பு சீனி, 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 350 ரூபாவாகும் என லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.
No comments