இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்திற்கு விதிக்கப்பட்ட தடையை சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் நீக்கியுள்ளது.
தடை நீக்கப்பட்டமை தொடர்பான அறிக்கையை சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் வெளியிட்டுள்ளது.
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் நிர்வாகம் தொடர்பாக கடந்த ஜூலை 24 ஆம் திகதி அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட விடயங்களும் கவனத்தில் கொள்ளப்பட்டது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, எதிர்காலத்தில் இலங்கை கால்பந்தாட்ட அணிக்கு சர்வதேச போட்டிகளில் பங்குபற்றும் வாய்ப்பு கிட்டுமென்பது குறிப்பிடத்தக்கது.
No comments