Header Ads

உக்ரேனில் உள்ள மிகப்பெரிய தானிய சேமிப்பகம் மீது ரஷ்யா தாக்குதல் - பிரான்ஸ் கண்டனம்

 


உக்ரேனில் உள்ள மிகப்பெரிய தானிய சேமிப்பகம் ஒன்றின் மீது இரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 40,000 தொன் எடையுள்ள தானியங்கள் சேதமாகியுள்ளன.

இந்த தாக்குதலுக்கு பிரான்ஸ் கடும் கண்டனங்கள் வெளியிட்டுள்ளது. உக்ரேன் ஐரோப்பாவில் உள்ள Danube எனும் நதியினை துறைமுகம் போன்று பயன்படுத்தி, ஏற்றுமதி இறக்குமதிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இந்த துறைமுகத்தில் சேமிக்கப்பட்டிருந்த 40,000 தொன் தானிங்களை இரஷ்யா அழித்துள்ளது.

'உக்ரேனின் பொதுமக்கள் உட்கட்டமைப்பின் மீது இரஷ்யா தொடர்ச்சியாக தககுதல் நடத்தி வருகிறது. இது ஏற்றுக்கொள்ள முடியாதது' என பிரான்ஸ் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.  

No comments

Powered by Blogger.