Header Ads

குடியேற்றம் தொடர்பான சட்டம் நிறைவேற்ற ’49.3 அரசியலமைப்பு’ பயன்படுத்துவாரா ஜனாதிபதி மக்ரோன்..??

 


பாராளுமன்றத்தில் வாக்கெடுக்கப்படாமல், 49.3 எனும் அரசியலமைப்பை பயன்படுத்தி ‘குடியேற்றம் தொடர்பான’ சட்டத்தினை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் நிறைவேற்றக்கூடும் என சந்தேகங்கள் எழுந்துள்ளன.

பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத ஜனாதிபதி மக்ரோனின் அரசாங்கம் முன்னதாக, ஓய்வூதிய சட்டத்தினை நிறைவேற்றவும், வரவு செலவு திட்டத்தினை நிறைவேற்றவும் இந்த வழியை பயன்படுத்தியிருந்தது. இந்நிலையில், அகதிகளின் குடியேற்றம் தொடர்பான சட்டத்திருத்தத்துக்கும் அதே நடைமுறையை கையாளக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த சர்ச்சைகளுக்கு பிரதமர் Elisabeth Borne முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இன்று தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட பிரதமர் Elisabeth Borne, இது தொடர்பாக தெரிவிக்கையில், ’தற்காலிக பெரும்பான்மையினாலோ அல்லது அவசரமாகவோ அதனை நிறைவேற்றும் முடிவிலோ ஜனாதிபதி இல்லை’ என தெரிவித்தார். 

No comments

Powered by Blogger.