Header Ads

போதைப்பொருள் - பாதாள உலகக் குழுவை ஒழிக்க விசேட நடவடிக்கை

 


போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளை ஒழிப்பதற்காக பொலிஸ்  மா அதிபரின் முழுமையான மேற்பார்வையின் கீழ் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளைக் கொண்ட விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸின் ஆலோசனைக்கு அமைய இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தலைமையில் இந்த விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

பாதாள உலகக்குழுவின் செயற்பாடுகள் மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாடு தொடர்பான விடயங்களை பொலிஸ் தலைமையகம் மற்றும் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சுக்கு அறிவிப்பதற்கான கடப்பாடு இந்த குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 



No comments

Powered by Blogger.