கொடுப்பனவு நாளை வழங்கப்படும்: ஷெஹான் சேமசிங்க தெரிவிப்பு
முதியோர், ஊனமுற்ற மற்றும் நீரிழிவு நோயாளர்களுக்கான ஜூலை மாதத்திற்கான கொடுப்பனவுகளை செலுத்துவதற்காக 2 ஆயிரத்து 684 மில்லியன் ரூபா நிதி, திறைசேரியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிதி மாவட்ட செயலகங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, முதியோருக்கான கொடுப்பனவுகளை தபால் அலுவலகங்களின் ஊடாகவும் ஊனமுற்ற மற்றும் நீரிழிவு நோயாளர்களுக்கான கொடுப்பனவுகளை பிரதேச செயலகங்களின் ஊடாகவும் நாளை (25) முதல் பெற்றுக்கொள்ள முடியும் என இராஜாங்க அமைச்சர் தனது ருவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
No comments