Header Ads

தங்கத்தின் விலையிலும் சடுதியான உயர்வு


நேற்று முன்தினத்துடன்  ஒப்பிடும் போது இன்றையதினம் தங்கத்தின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்களின் படி, இன்றைய தினம் தங்க அவுன்ஸின் விலையானது 628,175.51 ரூபாவாக பதிவாகியுள்ளது.

கடந்த இரு தினங்களுடன் ஒப்பிடும் போது இது சடுதியான அதிகரிப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சந்தை நிலவரங்களின் படி இன்றையதினம் தங்க அவுன்ஸின் விலை 629,432 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 22,210 ரூபாவாக இன்று பதிவாகியுள்ளதுடன், 24 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 177,650 ரூபாவாக பதிவாகியுள்ளது.

22 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 162,900 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 20,360 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதேவேளை, 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 19,440 ரூபாவாகவும், 21 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 155,500 ரூபாவாகவும் இன்றையதினம் பதிவாகியுள்ளது.

எனினும் ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 



No comments

Powered by Blogger.