ரஷ்யாவின் எண்ணெய்க் கப்பல் மீது உக்ரைன் தாக்குதல்
கருங்கடலில் உக்ரைன் நடத்திய தாக்குதலில் 11 பணியாளர்களுடன் பயணித்த ரஷ்யாவின் எண்ணெய் கப்பல் ஒன்று சேதமடைந்துள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கெர்ச் ஜலசந்தியில் நேற்றிரவு நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் கப்பலின் இயந்திர அறை சேதமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தாக்குதலின் போது எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் ரஷ்ய தரப்பினர் அறிவித்துள்ளனர்.
ரஷ்யாவின் கடல் போக்குவரத்து நிறுவனம் கிரிமியன் பாலத்திற்கு தெற்கே 17 மைல் தொலைவில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.
கடற்படையின் ஆளில்லா விமானம் மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
எனினும் உக்ரைன் இதுவரை பகிரங்கமாக கருத்துக்கள் எதுவும் தெரிவிக்கவில்லை.
அதேநேரம், கடந்த வெள்ளிக்கிழமையும் ரஷ்யாவின் கப்பல் ஒன்று தாக்குதலுக்கு இலக்கானமை குறிப்பிடத்தக்கது.
No comments