Header Ads

மதுபான போத்தல்களில் பாதுகாப்பு ஸ்டிக்கர் கட்டாயம்


எதிர்வரும் செப்டம்பர் 15 ஆம் திகதிக்குள் அனைத்து மதுபான போத்தல்களிலும் பாதுகாப்பு ஸ்டிக்கர் ஒட்டுவதை கட்டாயமாக்குமாறு கலால்வரி திணைக்களத்திற்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

வழிகள் மற்றும் வழிமுறைகள் தொடர்பான தெரிவுக்குழுவினால் இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, எதிர்வரும் 15 ஆம் திகதிக்குள் அனைத்து தயாரிப்புகளிலும் பாதுகாப்பு ஸ்டிக்கர் ஒட்டுவதை கட்டாயமாக்க உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

போலி மதுபான போத்தல்கள் சந்தைக்கு வருவதை தடுப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

எவ்வாறாயினும், உள்நாட்டில் தயாரிக்கப்படும் பல மதுபான போத்தல்களில் இதுவரை பாதுகாப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.



No comments

Powered by Blogger.