நள்ளிரவில் துப்பாக்கிச் சூடு: இளம் பெண் காயம்
மாத்தறை - தெதியகல பகுதியில் நேற்றிரவு(28) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பெண்ணொருவர் காயமடைந்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயங்களுக்குள்ளான 25 வயதான குறித்த பெண் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குடும்பத்தகராறு காரணமாக, காயமடைந்த பெண்ணின் சகோதரியின் கணவரால் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர், மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
No comments