கோதுமை தட்டுப்பாடு ஏற்படும் சாத்தியம்!
இறக்குமதி செய்யப்பட்ட கோதுமை மா கையிருப்பில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக புறக்கோட்டை கோதுமை மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரீமா மற்றும் செரண்டிப் தவிர அனைத்து இறக்குமதியாளர்களுக்கும் கோதுமை மாவை இறக்குமதி செய்வதற்கு கடந்த ஜூலை 16 ஆம் திகதி முதல் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு திணைக்களம் தடை விதித்துள்ளது.
தடை விதிக்கப்பட்ட நேரத்தில், புறக்கோட்டை மொத்த விற்பனையாளர்களிடம் கோதுமை மா பாரிய அளவில் கையிருப்பில் இருந்தது.
அது தற்போது தீர்ந்து வருவதாகவும் இந்த நிலை காரணமாக சந்தையில் கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு ஏற்படக் கூடும் என புறக்கோட்டை கோதுமை மா இறக்குமதியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதன் காரணமாக விலையில் அதிகரிப்பு ஏற்படலாம் என அந்த சங்கத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பிரீமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் கடந்த மாதம் 18 ஆம் திகதி ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 10 ரூபாவினால் குறைத்திருந்த நிலையில், தற்போது சந்தையில் ஒரு கிலோ கோதுமை மா 220 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.
No comments