Header Ads

அமெரிக்காவை அச்சுறுத்தும் சூறாவளி!


அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தைக் கடுமையான சூறாவளி தாக்க காணப்படுகிறது என அந்த நாட்டு வானிலை ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஹிலாரி என பெயரிடப்பட்டுள்ள இந்த சூறாவளி நேற்று முன்தினம்   உருவாகியுள்ளது. கிழக்கு பசுபிக் கடல் பகுதியை நோக்கி விரையும் இந்த சூறாவளி மெக்சிகோ நாட்டிலும், அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்திலும் கடும் மழை பொழிவை ஏற்படுத்தலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் கடந்த 1939 ஆம் ஆண்டு சூறாவளி காரணமாக இந்த பகுதியில் கடும் மழை மற்றும் பெருமளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த முறையும் இது நடந்தால் கிட்டத்தட்ட 84 வருடங்களுக்குப் பிறகு ஏற்படும் சூறாவளியாக இருக்கும் எனவும் வானிலை ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

தற்போதைய நிலவரப்படி, மணிக்கு 140 மைல் வேகத்தை அடைந்துள்ள இந்த சூறாவளியை 4 ஆவது ரகமாக தேசிய சூறாவளி மைய நிபுணர்கள் வகைப்படுத்தியுள்ளனர்.

இதன் காரணமாகத் தென்மேற்கு அமெரிக்காவில் நேற்று ஆரம்பித்து அடுத்த வாரம் வரை பாரிய புயல் காற்றும், கடும் மழையும் பெய்யக்கூடும் என்றும் இது இன்று அல்லது நாளை மேலும் தீவிரமடையலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புயல் காரணமாகக் கடுமையான சேதங்கள் உண்டாகலாம் எனவும் தேசிய வானிலை சேவை எச்சரித்துள்ளது. இந்த சூறாவளி தெற்கு கலிபோர்னியா, தெற்கு நிவேடா, மேற்கு அரிசோனா மற்றும் தென்மேற்கு உட்டா பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

No comments

Powered by Blogger.