72 மணித்தியாலங்களில் வாக்னர் கூலிப்படையினர் கொல்லப்படலாம்!
ரஷ்யாவில் வாக்னர் கூலிப்படையினர் மீண்டும் ஒரு ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபடலாம் என அச்சம் உருவாகியுள்ளது.
இந்த நிலையில், அடுத்த 72 மணி நேரத்தில் வாக்னர் கூலிப்படையில் மீதமிருப்போர் கொல்லப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வாக்னர் கூலிப்படையினரின் தலைவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, பழிக்குப் பழி வாங்க வாக்னர் குழுவினர் உறுதிமொழி எடுத்துள்ளனர்.
இந்த நிலையில், அவர்கள் விரைவில் மீண்டும் ரஷ்யாவில் ஒரு ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபடலாம் எனவும் தகவல் கசிந்துள்ளது.
இந்த தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், புடின் விரைவாக நடவடிக்கை எடுப்பார் என்றும் அமெரிக்க முன்னாள் இராணுவ உளவுத்துறை அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், அடுத்த 72 மணி நேரம் மீதமிருக்கும் வாக்னர் குழுவினருக்கு ஆபத்து என்றும், ஏனையவர்கள் சர்வதேச நாடுகளின் கவனம் ஈர்க்காமலேயே தற்கொலை செய்து உயிரிழக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
No comments